அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்கள், வங்கதேசத்திற்கு செல்லும் துப்ரி, ஸ்ரீபூமி அல்லது தெற்கு சல்மாரா-மன்கச்சார் வழியாக அசாமை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் அசாமில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேரை அசாம் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர். சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களுக்கு முடிவு கட்டுவது உறுதி என அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
















