பணி நிரந்தரம் செய்யக் கோரி 6வது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை போலீசார் குண்டுகட்டாகக் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் 6வது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக தேர்தல் வாக்குறுதியின்படி பணி நிரந்தரம் செய்யக் கோரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காலைத் திடீரென வந்த 200க்கும் மேற்பட்ட போலீசார், செவிலியர்களை குண்டுகட்டாக இழுத்து சென்று கைது செய்தனர்.
















