இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தி 1 கோடி பேரின் உயிரை காப்பாற்றியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலையடுத்து ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் புகட்டியது.
இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே சில நாட்கள் போர் மூண்ட நிலையில், பாகிஸ்தான் கெஞ்சியதன் பேரில் இந்தியா போரை நிறுத்தியது.
இதனிடையே தனது தலையீட்டின் காரணமாகவே போர் நிறுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் ஊடகங்களிடம் பேசிய டிரம்ப், பாகிஸ்தான் – இந்தியாவுக்கு இடையே ஏற்படவிருந்த அணு ஆயுத போரை தான் தடுத்து நிறுத்தியதாகவும், இல்லையெனில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என ஷெபாஷ் ஷெரீப் கூறியதாகவும் தெரிவித்தார்.
















