1971-ம் ஆண்டை நினைவுகூர்ந்து இந்தியாவுடனான பதட்டங்களை வங்கதேசம் தணிக்க வேண்டும் என ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் வெடித்த வன்முறையில், இந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
இதனால் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான உறவு மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள வங்கதேசத்திற்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கிரிகோரிவிச் கோசின், வங்கதேசம் எவ்வளவு சீக்கிரம் பதற்றத்தைக் குறைக்கிறதோ அவ்வளவு நல்லது எனக் கூறினார்.
மேலும், 1971-ம் ஆண்டு சுதந்திரம் பெற காரணமானது தொடங்கி, பெரும்பாலும் வங்கதேசத்துக்கு இந்தியாவே உதவியுள்ளது என்பதை நினைத்துப் பார்க்கவும் அவர் வலியுறுத்தினார்.
















