திமுகவுக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் அதிக நன்கொடை அளித்திருப்பது, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கொல்கத்தாவை தளமாகக் கொண்டு செயல்படும் டைகர் அசோசியேட்ஸ் லாட்டரி நிறுவனத்தில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் நெருங்கிய நண்பரான சுப்பையன் நாகராஜன் பங்குதாரராக உள்ளார்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட லாட்டரி நிறுவனமானது, 2024- 2025-ம் ஆண்டுகளில் திமுகவுக்கு அதிக நன்கொடை அளித்திருப்பது, தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி சமர்ப்பித்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அதன்படி, கடந்த 2024 – 2025-ம் ஆண்டில், திமுகவுக்கு டைகர் அசோசியேட்ஸ் லாட்டரி நிறுவனமானது 50 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை வழங்கி இருப்பது அம்பலமாகியுள்ளது.
அதேபோல, 2019-ல் இருந்து 2024 வரை, மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் நிறுவனம், திமுகவுக்கு 509 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுபற்றிப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்தப் பங்களிப்பு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால், லாட்டரியை திமுக தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்காது” எனவும் கூறினார்.
















