தமிழ் மொழியின் பெயரால் திமுக அரசு நாடகமாடுவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சனம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
SI முதன்மைத் தேர்வுக்கான கேள்வித் தாளில், தமிழ் கேள்விகள் முழுமையாக நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எந்த முன்னறிவிப்புமின்றி தமிழ் கேள்விகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு நடைமுறைகளில், தேர்வு நாளில் முன்னறிவிப்பின்றி விதிகளை மாற்றுவது, அரசுத் தேர்வுகளின் நம்பகத்தன்மையையே சிதைப்பதாகவும், சார்பு ஆய்வாளர் தேர்வில் தமிழை புறக்கணித்திருப்பது திமுக அரசின் போலி தமிழ்ப் பற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க, தேர்வில் அவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
















