வங்கதேச தேர்தல் : பிரதமர் கனவில் நாடு திரும்பும் கலிதா மகன்!
Jan 14, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வங்கதேச தேர்தல் : பிரதமர் கனவில் நாடு திரும்பும் கலிதா மகன்!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், அவரின் அரசியல் வாரிசும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் தாய்நாட்டுக்குத் திரும்புகிறார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பும் தாரிக் ரஹ்மானுக்குச் சிறப்பான வரவேற்பு கொடுக்க வங்கதேச தேசியவாதக் கட்சி தயாராகி வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வங்க தேச அரசியல் என்பது முன்னாள் பிரதமர்களான ஷேக் ஹசீனாவுக்கும் கலீதா ஜியாவுக்கும் இடையிலான போட்டியாகவே இருந்து வருகிறது. அந்நாட்டின் தேசிய தலைவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இந்த இருவருமே மாறி மாறிப் பல ஆண்டுகளாக வங்கதேசத்தின் பிரதமர்களாக இருந்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர் போராட்டத்தின் விளைவாக, பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

அதற்கு மறுநாளே வங்கதேச தேசியவாதக் கட்சியின் பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கிர், அக்கட்சியின் செயல்தலைவர் தாரிக் ரஹ்மான் லண்டனில் இருந்து நாடு திரும்புவார் என்று அறிவித்தார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில், பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தாரிக் ரஹ்மான் வங்கதேசம் திரும்புவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவரது அவாமி லீக் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்களை முகமது யூனுஸின் இடைக்கால அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைத்துள்ளது. இன்னொருபுறம், சிறை தண்டனை அனுபவித்து வந்த வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் கலீதா ஜியா விடுவிக்கப்பட்டுள்ளார். அரசியல் காரணங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்ட அக்கட்சியினர் அனைவருக்கும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் ஆதரவுடன் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவதாகக் குற்றம் சாட்டிய வங்கதேச தேசியவாத கட்சி கடந்த தேர்தலைப் புறக்கணித்தது. வங்கதேசத்தில் ஷரியா சட்டத்தைக் கொண்டுவர விரும்பும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளான ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் ஹெஃபாசத்-இ-இஸ்லாம் ஆகியவற்றுக்கும் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. முழுமையாக இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்கு அடிப்படையாக, நாட்டின் ஜமாத் விதிகள் மறுசீரமைக்கப்படும் வரை இந்தியாவுக்கு எதிரான ஆட்சி நீடிப்பதையே ஜமாத்-இ-இஸ்லாமி விரும்புகிறது.

மேலும் வரும் தேர்தலில் எந்தக் கூட்டணியிலும் இடம்பெறப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனவே அவாமி லீக் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் தாரிக் ரஹ்மானின் BNP கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி BNP கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தாரிக் ரஹ்மானே வங்கதேசத்தின் அடுத்த பிரதமராகப் பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

போகுரா-7 தொகுதியில் கலீதா ஜியாவும், சென்ற தேர்தல்களில் கலீதா ஜியா போட்டியிட்டு வெற்றிபெற்ற போகுரா-6 தொகுதியில் தாரிக் ரஹ்மானும் போட்டியிட உள்ளனர். முன்னதாகக் கடந்த ஜூன் மாதம், வங்கதேசத்துக்கான அமெரிக்க தூதர் (Tracey Ann Jacobson) டிரேசி ஆன் ஜேக்கப்சன் லண்டனில் தாரிக்கைச் சந்தித்து, இந்திய-வங்கதேசப் பிரச்சினைகள் குறித்த விரிவாக விவாதித்திருந்தார்.

அதே நேரத்தில் லண்டன் சென்றிருந்த முகமது யூனுஸும் தாரிக்கை சந்தித்து பேசியிருந்தார். தொடர்ந்து BNP கட்சி பொதுச் செயலாளர் தலைமையிலான குழுவினரும் லண்டன் சென்று தாரிக்கை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். ஏற்கெனவே, விரிவான பிரச்சாரத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ள தாரிக், ஆட்சிக்கு வந்ததும் BNP கட்சி கொண்டுவர இருக்கும் தொடர் திட்டங்களையும் அறிவித்துள்ளார். எனினும் மற்ற இஸ்லாமிய மற்றும் இடதுசாரி பயங்கரவாதிகளுடன் இரகசிய தொடர்புகளை தாரிக் இன்றும் பேணி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

லண்டனில் உள்ள ISI அதிகாரிகளுடனுடனும், பாகிஸ்தானில் உள்ள தாவூத் இப்ராஹிம் உடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தாரிக், கடந்த தேர்தலில் ஷேக் ஹசீனா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மாலத்தீவில் நடத்தியது போல INDIA OUT என்ற பிரச்சாரத்தைத் திட்டமிட்டு செயல்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், தேர்தல் வாக்குப்பதிவின்போது, பொது வாக்கெடுப்பையும் ஒரே நாளில் நடத்துவது என்பது “தேர்தல் இனப்படுகொலைக்கு” வழிவகுக்கும் என்றும் ஜமாத்-இ-இஸ்லாமி எச்சரித்துள்ளது.

ஆனாலும் ஒரேநாளில் இரண்டையும் நடத்துவதாக முகமது யூனுஸ் அரசு அறிவித்துள்ள நிலையில், தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கும் முயற்சியில் ஜமாத்-இ-இஸ்லாமி ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. தேர்தல் நடக்குமா ? தாரிக் வெற்றிபெறுவாரா? அல்லது தேர்தல் தடுக்கப்படுமா ? இஸ்லாமிய ஷரியத் சட்டம் வங்கதேசத்தில் கொண்டுவரப்படுமா? இது போன்ற பல கேள்விகள் இன்னமும் பதில் இல்லாமல் உள்ளன.

Tags: BangaladeshBangladesh elections: Khaleda's son returns to the country in the Prime Minister's dreamவங்கதேச தேர்தல்
ShareTweetSendShare
Previous Post

கணவரை துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை – மனைவி, காதலனை சிக்கவைத்த டாட்டூ, புகைப்படம்

Next Post

தாயும், மகளும் வளர்க்கும் காளை : ஜல்லிக்கட்டு களத்திற்கு தயாராகும் “சித்தன்”!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies