பாஜகவினர் ராகுல் காந்தியை போல பகுதிநேர அரசியல்வாதியாக இல்லாமல், முழுநேர ஊழியர்களாக இருக்க வேண்டும் என, அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் நிதின் நபின் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய அளவிலான உயர் பொறுப்பை பெற்றபின் அவர் முதன்முறையாக பீகார் சென்றார். பட்னாவில் அவர் நடத்தி ROAD SHOW-வில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் கலந்துகொண்டு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசியலில் வெற்றிப்பெற எந்த குறுக்கு வழியும் இல்லை என தெரிவித்தார். அரசியல் என்பது பொறுமை, அர்ப்பணிப்பு, விடா முயற்சி உள்ளிட்டவை தேவைப்படும் நீண்ட தூர பந்தயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாஜகவினர் அனைவரும் முழுநேர ஊழியர்களாக செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், ராகுல் காந்தியை போல பகுதிநேர அரசியல்வாதியாக இருக்க கூடாது என அறிவுறுத்தினார்.
















