அமெரிக்க செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - தற்சார்பு இந்தியாவின் அடுத்த கட்டத்திற்கு இஸ்ரோ சென்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்!
Sep 12, 2026, 12:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் – தற்சார்பு இந்தியாவின் அடுத்த கட்டத்திற்கு இஸ்ரோ சென்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 24, 2025, 12:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தற்சார்பு இந்தியா எனும் நமது முழக்கத்தின் அடுத்த கட்டத்திற்கு இஸ்ரோ சென்றுள்ளதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து காலை 8.55 மணிக்கு பாகுபலி ராக்கெட் மூலம் புளூபேர்ட்- 6 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் 6 ஆயிரத்து 100 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை முதன் முதலாக வெற்றிகரமாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

இது தொலைதுார கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், புளூபேர்ட் பிளாக் – 2 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவித்தார். அமெரிக்காவின் முதல் பிரத்யேக வணிக ரீதியான செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எல்எம்வி-3 ராக்கெட் மூலம் இதுவரை 9 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளதாகவும், இந்திய ராக்கெட் மூலம் இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட புளூபேர்ட்- 6 செயற்கைக்கோள் மிக கனமானது எனவும் குறிப்பிட்டார். மேலும், எல்எம்வி-3 ராக்கெட், அதன் 100 சதவீத நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது எனவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், இந்திய ராக்கெட் மூலம் அமெரிக்க செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வணிக ரீதியில் ராக்கெட்டுகளை ஏவுவதில், உலக சந்தையில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்தார். விண்வெளித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எனக்கூறியுள்ள பிரதமர் மோடி, விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து உயரப் பறப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Tags: satellite weighing 6100 kilogramsLVM-3 rocketISRO Chairman SomanathISROprime minister modiAndhra PradeshSriharikotaSatish Dhawan Space CentreBluebird-6 satellite
Share
Tweet
SendShare
Previous Post

ராகுல் காந்தியை போல பகுதிநேர அரசியல்வாதியாக இல்லாமல், முழுநேர ஊழியர்களாக இருக்க வேண்டும் – நிதின் நபின்

Next Post

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கற்பூர ஆழி ஊர்வலம் கோலாகலம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies