கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்வில் காங்கிரஸ் மாவட்ட தலைவரை, தவெக நிர்வாகிகள் ரகசியமாக சந்தித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
அருமனை சந்திப்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். அந்த வகையில் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த குமரி மேற்கு மாவட்ட காங்கிர தலைவர் பினுலால் சிங்கை சந்தித்து ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்த கேள்விக்கு விழாவில் மட்டுமே பங்கேற்க வந்ததாக மழுப்பலாக பதிலளித்துவிட்டு பினுலால் சிங் அங்கிருந்து சென்றார். ஏற்கனவே விஜய்யுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.
இதனிடையே தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவுடன், பினுலால் சிங் சந்திப்பு நடத்தி இருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அழைப்பிதழில் எம்பிக்கள் ரூபி மனோகரன், விஜய் வசந்த் பெயர்கள் அச்சிடப்பட்டும் அவர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
















