புதுக்கோட்டை : வேங்கைவயல் சம்பவம் நடந்து இன்றுடன் 3 ஆண்டு நிறைவு!
Mar 16, 2026, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டை : வேங்கைவயல் சம்பவம் நடந்து இன்றுடன் 3 ஆண்டு நிறைவு!

பாதிக்கப்பட்டோர் மீதே திமுக அரசு குற்றஞ்சாட்டி வருவதாக மக்கள் வேதனை!

Murugesan M by Murugesan M
Dec 26, 2025, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கைவயல் சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பாதிக்கப்பட்டோர் மீதே திமுக அரசு குற்றஞ்சாட்டி வருவதாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் சமூகத்தினர் பயன்படுத்திய குடிநீர்த் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று, இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள.

இந்த விவகாரம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். மேலும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான தனிநபர் ஆணையமும், பட்டியலின ஆணையமும் விசாரணை மேற்கொண்டது.

அதன் அடிப்படையில், புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், புகார் தெரிவிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த காவலர் முரளிராஜா உட்பட 3 பேர் குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கூறி சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதனிடையே, குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என்று தாக்கல் செய்த மனு விசாரணையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

வேங்கைவயல் விவகாரத்தால் கடந்த மக்களவைத் தேர்தலை ஒரு தரப்பினர் புறக்கணித்ததால், குறைந்த எண்ணிக்கையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் வேங்கைவயல் விவகாரம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கேள்வி எழுந்துள்ளது.

Tags: புதுக்கோட்டைPudukkottai: Today marks 3 years since the Vengaivayal incidentவேங்கைவயல் சம்பவம்DMKMK StalinTn news
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலைக்கு அசைவ உணவு எடுத்துச் செல்ல முயன்ற இஸ்லாமிய தம்பதி!

Next Post

ரஷ்யா – சீனா கூட்டுத் திட்டத்தில் விண்வெளியில் அணு மின் நிலையம்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies