ஜென்ஸீ தலைமுறையினரின் திறன்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வீர பாலகர் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, இளம் தலைமுறையினர் தங்கள் நாட்டை, வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.
இளம் தலைமுறையினரின் பலம் மற்றும் திறமையை பார்க்கும் போது அவர்கள் மீது தான் வைத்திருக்கும் நம்பிக்கையை புரிந்து கொள்ள முடிவதாகவும், பெரிய கனவுகளை காணுங்கள், கடினமாக உழையுங்கள், தன்னம்பிக்கையை ஒரு போதும் தளர்ந்துவிட அனுமதிக்காதீர்கள் எனவும் வலியுறுத்தினார்.
இதுதான் இந்திய இளைஞர்களிடம் இருந்து தான் எதிர்பார்ப்பதாக கூறிய பிரதமர் மோடி, இந்தியாவின் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் எதிர்காலம் பிரகாசமாக இருந்தால்தான் இந்தியாவின் எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
















