திருப்பூரில் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
அவிநாசி, பெருமாநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில மாதங்களாகப் பேருந்து பயணிகளின் செல்போன்கள் தொடர்ச்சியாக மாயமானது.
இதுதொடர்பாகப் புகார்கள் பெறப்பட்டு வந்த நிலையில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் சந்தேகம்படும் படியாகச் சுற்றித்திரிந்த காரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் ஒரு சிறார் உட்பட 5 பேர் இருந்ததும் அவர்களிடம் திருடப்பட்ட செல்போன்கள் இருந்ததும் தெரியவந்தது. பின்னர் அனைவரையும் கைது செய்த போலீசார் 79 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















