கனடாவில் தனது கணவருக்கு முறையாகச் சிகிச்சை தராமல் அலைக்கழித்துக் கொன்று விட்டதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியர்கள் கணிசமானோர் கனடாவில் வசித்து வருகிறார்கள். அப்படி, கனடாவில் வசித்து வந்தவர் தான் 44 வயதான பிரசாந்த் ஸ்ரீகுமார்.
இவருக்குச் சமீபத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் எட்மண்டனில் உள்ள கிரே நன்ஸ் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டனர். இருந்த போதிலும், அவருக்கு உடனடியாகச் சிகிச்சை ஆரம்பிக்கவில்லை.
சுமார் 8 மணி நேரம் அவரை காக்க வைத்துள்ளனர். இறுதியில் சிகிச்சைக்கு அழைத்தபோது அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது கணவர் நெஞ்சுவலி அதிகரித்துக் கொண்டே போவதாகச் சொன்னதாகவும், ஆனால் மருத்துவர்கள் அதைக் கண்டு கொள்ளாததால் அவரை இழந்துவிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
















