தங்க நகைகளுக்குச் செய்கூலி சேதாரம் இல்லை என்ற அறிவிப்பால் சேலத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
சேலம் ஓமலூர் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையில், தங்கத்தின் விலை உயர்வால் விற்பனை மந்தநிலையில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் சலுகை அறிவிப்பை நிறுவனத்தினர் வெளியிட்டனர்.
காலை 5 மணி முதல் 10 மணி வரை தங்கம் வாங்குபவர்களுக்கும், புக்கிங் செய்பவர்களுக்கும் செய்கூலி, சேதாரம் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனை அறிந்த மக்கள், நேற்று மாலை முதலே கடையில் குவியத் தொடங்கினர்.
உடனே புக்கிங் செய்யுமாறு கூறி ஊழியர்களிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஊழியர்கள் கடையை அடைத்தனர்.
இதனிடையே, கடைக்கு முன்பு ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாகனத்தை நிறுத்தி வைத்ததால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
















