சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கண்மாய் நீர் வீடுகளை சூழ்ந்ததால் கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
விரகனூர் மதகு அணையில் இருந்து மேல வெள்ளூரில் உள்ள கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில், கால்வாயை கடந்த தண்ணீர் கட்டம்மன்கோட்டை கிராமத்திற்குள் புகுந்தது.
இதனால் கிராம மக்கள் அவதியடைந்தனர். நீர்வரத்துக் கால்வாயில், கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள காரணத்தால் தண்ணீர் ஊருக்குள் வருவதாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
















