சென்னையை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த நர்சிங் மாணவிகளின் உடமைகள் சாலையோரமாக வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விரிவாக்கப் பணிக்காக மவுலிவாக்கத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அகற்றினர். அப்போது அங்கிருந்த தங்கும் விடுதியையும் அதிகாரிகள் அகற்ற முயன்றனர்.
எனவே அங்குத் தங்கியிருந்த மாணவிகளின் உடமைகளை விடுதி நிர்வாகம் சாலையோரமாக வீசியதாகக் கூறப்படுகிறது.
இதனையறிந்து வந்த மாணவிகள், முன்னறிவிப்பின்றி உடமைகளை வீசியது குறித்து கேள்வி எழுப்பியதோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
















