இந்தியாவின் இளம் நகராட்சி தலைவராகக் கேரளாவில் 21 வயதே ஆன தியா பினு என்ற இளம்பெண் பதவியேற்றுள்ளார்.
அண்மையில் கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகராட்சியின் 15 ஆவது வார்டில் தியா பினு என்ற 21 வயது பெண் போட்டியிட்டார்.
தொடர்ந்து அவர் 131 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதேபோல் அவரது தந்தை மற்றும் மாமாவும் சுயேட்சை வேட்பாளர்களாக வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் தியா பினு பாலா நகராட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் இந்தியாவின் இளம் நகராட்சி தலைவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
















