ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கல்வீச்சு தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சோமு நகரில் உள்ள மசூதி அருகே சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
ஒருவருக்கு ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்டதில் 4 போலீசார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் பதற்றத்தை தணிக்க அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
















