பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பாராட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
ஆர்எஸ்எஸ்-ன் அடிமட்ட சேவகனும், பாஜக தொண்டனும், தலைவர்களின் காலடியில் எளிமையான முறையில் தரையில் அமர்ந்து, மாநிலத்தின் முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது தான் அந்த அமைப்பின் சக்தி என்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்ற அவர், காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் அடிமட்ட தொண்டன் உயர் பதவிக்கு வருவது சாத்தியமில்லை என்பதைத் தான் அவர் மறைமுகமாக வலியுறுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
















