கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து வரும் கனரக வாகனங்களுக்குத் தமிழக எல்லைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
கேரளா மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் போன்ற மாவட்டங்களில் மீண்டும் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இது தமிழகத்திலும் பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழக-கேரள எல்லைகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாகக் குமரி மாவட்டத்தின் மாநில எல்லையான படந்தாலுமூடு சோதனைச்சாவடியில், கேரளாவிலிருந்து வரும் வாகனங்களின் டயர்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிறகு அனுமதி வழங்கப்படுகிறது.
















