நாமக்கல் சந்தையில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 40 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அவற்றின் கொள்முதல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு முட்டையின் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து, 6 ரூபாய் 40 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் சில்லரை விற்பனையில் ஒரு முட்டை 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். முட்டையின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததால், விலை உயர்ந்து வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.
















