தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பிரிவினைவாதிகளுக்கும், தேசியவாதிகளுக்கும் இடையேதான் போட்டி என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், போடியில் அவர் அளித்த பேட்டியில்,
நாட்டிலேயே பொருளாதாரத்தில் மோசமான நிலையில் உள்ளது தமிழகம்தான் என்றும் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் ரூ.9.30 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ஹெச்.ராஜா குறிப்பிட்டார்.
இந்துகளுக்கு எதிராக நடந்தால்தான் சிறுபான்மை வாக்கு கிடைக்கும் எனத் திமுக நினைக்கிறது என்றும் தமிழகத்தில் எந்தத் திட்டத்திற்காவது காந்தியின் பெயர் உள்ளதா? எங்குப் பார்த்தாலும் கருணாநிதிதான் என்று கூறியவர், தமிழகத்தில் பிரிவினைவாதிகளுக்கும், தேசியவாதிகளுக்கும் இடையேதான் போட்டி என்று ஹெச்.ராஜா உறுதியாக கூறினார்.
















