‘கள்’ ளை உணவாகப் பட்டியலிட்டிருக்கும் மத்திய அரசு ‘கள்’ இறக்கும் தொழிலையும் கைத்தொழிலாளாக அங்கீகரித்துள்ளது.
மத்திய அரசு அங்கீகரித்துள்ள 378 கைத்தொழில்களில் 6 ஆவது தொழிலாக ‘கள்’ இறக்கும் தொழில் உள்ளது.
அதன்படி அமைப்பு சாரா தொழிலாளர் நல அமைச்சகம் பனையேறும் தொழிலாளர்களுக்கு “கள் இறக்கும் தொழிலாளி” என அடையாள அட்டை வழங்கி வருகிறது.
அதனடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட கள் இறக்கும் தொழிலாளி எனத் தமிழகத்தின் முதல் பனைத்தொழிலாளியாகக் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் அடையாள அட்டையைப் பெற்றுள்ளார்.
இதன் காரணமாக அவர், தமிழகம் தவிர பிற அனைத்து மாநிலங்களிலும் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
















