குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நீர்மூழ்கி கப்பல் மூலம் கடலில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
நான்கு நாள் அரசு முறைப் பயணமாக, கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்குச் செல்வதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி தனது கோவா பயணத்தை முடித்துக் கொண்டு கர்நாடகாவிற்கு வருகை தந்தார். இதனதொடர்ந்து கார்வார் துறைமுகத்தில் இருந்து நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் வாக்ஸிரில் மூலம் கடல் பயணம் மேற்கொண்டார்.
அப்போது முப்படைகளின் தலைமைத் தளபதி திரிபாதி ஆகியோர் உடனிருந்தனர். அப்துல் கலாமுக்கு பிறகு, ஒரு இந்திய குடியரசுத் தலைவர் நீர்மூழ்கி கப்பலில் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
















