கன்னியாகுமரியில் அதிகாலையில் தெரிந்த சூரிய உதயத்தை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
பள்ளிஅரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் வாரவிடுமுறை ஒட்டிக் கன்னியாகுமரிக்கு இன்று சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர்.
இதன்காரணமாக அங்கு உள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. முன்னதாக ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் கடலில் புனித நீராடி, பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
















