திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும் என நம்புவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் கம்பர் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “கம்பனும் வைணவமும்” என்ற நூலை வெளியிட்டார்.
பின்னர் பேசிய அவர், தீபத்திற்கும் எனக்கும் என்ன பொருத்தம் உள்ளது எனத் தெரியவில்லை எனவும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கூடிய நாள் விரைவில் வரும் எனவும் தெரிவித்தார்.
தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் பிரச்சனை வரத்தான் செய்யும் எனக் கூறிய அவர், இறுதியில் அறமே வெல்லும் எனவும் குறிப்பிட்டார்.
















