மத்திய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகளை நேரில் சந்தித்து இனிப்புகளை வழங்கினர். அப்போது, ஜல் ஜீவன் மற்றும் நூறு நாள் வேலைத் திட்டங்களில் முறைகேடுகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த பாஜக பிரசாரப் பிரிவு மாநிலத் தலைவர் பாண்டியராஜன், அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
















