மத்திய அரசு கொண்டு வந்துள்ள தூய்மை இந்தியா திட்டம் சுகாதார நிலையை மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் அகில இந்திய மருத்துவ மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா பெருந்தொற்றின்போது பணியாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தாம் 3 முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது எந்த ஒரு மருத்துவரும் உதவி செய்ய மறுக்கவில்லை எனக் கூறினார்.
பிட் இந்தியா திட்டம் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டை மக்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
















