வாக்குகளை பெறுவதற்காகப் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுத்துத் திமுக அரசு ஏமாற்றி வருவதாகச் சௌமியா அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார்.
ஆற்காடு அடுத்த திமிரியில் பாமகவின் தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய அவர், ராணிப்பேட்டையில் 35 ஆண்டுகளாகத் தேங்கி கிடக்கும் குரோமியம் கழிவுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
















