பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளத்தை இந்திய ராணுவம் தாக்கி அழித்ததாகப் பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடங்கி, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத முகாம்களைத் தரைமட்டமாக்கியது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார், இந்தியா 36 மணி நேர இடைவெளியில் சுமார் 80 ட்ரோன்களை பாகிஸ்தான் எல்லைக்குள் அனுப்பியதாகவும், இதில் ஒரு ட்ரோன் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளத்தைத் துல்லியமாகத் தாக்கியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்தத் தாக்குதலில் ராணுவக் கட்டமைப்புகள் சேதமடைந்ததாகவும், ஏராளமான வீரர்கள் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
















