சத்தீஸ்கரில் நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், பெண் காவல் அதிகாரி கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டார்.
மனார் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்க தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்று கூறி, கடந்த 15 நாட்களாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அப்புறப்படுத்த முயன்ற காவல் நிலைய ஆய்வாளர் கமலா புசாமை போராட்டக்காரர்கள் தாக்கினர்.
















