மத்திய அரசின் நிதிக்கும், திட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஓட்டுவதுதான் திமுக அரசின் ஒரே வேலை என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
உதகையில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், திமுகவையும் ஊழலையும் பிரிக்கவே முடியாது என்றார்.
காற்றைக்கூட விற்று ஊழல் செய்ய திமுகவால் தான் முடியும் என்றும், மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் பிரதமர் மோடி என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக அரசு வீட்டுக்கு செல்ல இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன என்றும். “மத்திய அரசின் நிதிக்கும், திட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஓட்டுவதுதான் திமுக அரசின் ஒரே வேலை என்றும் எல்.முருகன் குறிப்பிட்டார்.
















