சென்னையில் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஊதிய முரண்பாடுகளை களைய கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 3-வது நாளாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போராட்டத்தை கைவிட போலீசார் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்க மறுத்ததையடுத்து இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து ஆசிரியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தின்போது ஆசிரியர்கள் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
















