தமிழக மணல் குவாரிகளில் 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக வழக்கறிஞர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் மனு அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், கடந்த ஆண்டு அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணங்களின் அடிப்படையில், தமிழக மணல் குவாரிகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட குவாரி ஒப்பந்தங்களில் சுரங்க விதிகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கான்பூர் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், அனுமதிக்கப்பட்ட அளவை விட 21 மடங்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 12 புள்ளி 10 ஏக்கர் பரப்பளவில் மணல் எடுக்க அனுமதி பெற்றிருந்த நிலையில், சட்டவிரோதமாக 2 ஆயிரத்து 439 ஏக்கர் பரப்பளவில் மணல் அள்ளப்பட்டுள்ளதாகவும் புகாரில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஊழல் தொடர்பாக உடனடியாக FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
















