சென்னை விமான நிலையத்தில் காரில் ஏறும்போது தவெக தலைவர் விஜய் தடுமாறிய காட்சி வெளியாகியுள்ளது.
மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பினார். அப்போது அவரை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
தொடர்ந்து விஜய்யை பார்க்க அவர்கள் முண்டியடித்ததால் விமான நிலைய வளாகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காரில் ஏறும்போது தொண்டர்களின் கூட்டத்தால் விஜய் தடுமாறினார். இதனால் விமான நிலையத்தில் பதற்றம் நிலவியது.
















