திருவண்ணாமலையில் உள்ளூர் வாசிகளின் கார்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாநில கார்கள் மட்டும் எவ்வாறு கோயில் வரை அனுமதிக்கப்படுகிறது? என தமிழக முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ராஜாராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலையில் தமிழக முன்னேற்றக் கழக மாநில நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜாராம், தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு திறந்து வைத்த புதிய பேருந்து நிலையம் முழுமையாக பணிகள் நிறைவு அடையவில்லை என தெரிவித்தார்.
மேலும் புதியதாக திறக்கப்பட்ட காய்கறி மார்க்கெட்டில் கடையின் மாத வாடகை 22 ஆயிரம் எனவும், அட்வான்ஸ் தொகை 10 லட்சம் கட்டி எவ்வாறு காய்கறி வியாபாரிகள் வணிகம் செய்ய இயலும் என்று கேள்வி எழுப்பினார்.
















