நூறு நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த மேல்பாக்கத்தில் பாஜக தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பாஜக நிர்வாகிகள், கடந்த தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் ஐந்து சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் எடுத்துக் கூறினர்.
மேலும், நூறு நாள் பணிக்கு வழங்கப்படும் பணத்தை, திமுக அரசுப் பணியாளர்களுக்கு முறையாக வழங்காமல் மோசடி செய்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய நிலை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
















