அதிமுகவும் பாஜகவும் தமிழக மக்களுக்குதான் அடிமை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என அளித்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.
எந்த வாக்குறுதிகளையும் கொடுக்காமல் 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக பிரதமர் மோடி உயர்த்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாஜக ஆளும் மாநிலங்களை விட 100 நாள் வேலை திட்டத்திற்காக தமிழகத்திற்குதான் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
















