ஐஎன்எஸ்வி கௌண்டின்யா என்பது வெறும் ஒரு கப்பல் மட்டுமல்ல; அது பாரதத்தின் கரைகளில் இருந்து மீண்டும் பயணம் புறப்படும் ஒரு நாகரிகத்தின் சின்னம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், எஞ்சின் அல்லது உலோகப் பிணைப்புகள் எதுவுமின்றி, முற்றிலும் பண்டைய இந்தியத்கப்பல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட, 5-ஆம் நூற்றாண்டு பாணியிலான இந்தக் கப்பல், காற்று மற்றும் பாய்மரங்களால் மட்டுமே இயக்கப்பட்டு, நமது முன்னோர்களின் மேதையையும், நமது சாஸ்திர மற்றும் பாரம்பரிய அறிவு அமைப்புகளின் ஆழத்தையும் வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
போர்பந்தரில் இருந்து மஸ்கட்டிற்கு தனது முதல் பயணத்தைத் தொடங்கி, வளைகுடா நாடுகளுடனான நமது வரலாற்று வர்த்தகத் தொடர்புகளை மீண்டும் பின்தொடரும் இந்த யாத்திரை, இந்தியாவின் செழுமையான கடல்சார் பாரம்பரியத்திற்கும், இந்தியப் பெருங்கடலுடனான நமது பன்னெடுங்காலத் தொடர்புக்கும் ஒரு உயிருள்ள சான்றாகத் திகழ்கிறது என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் ரேந்திரமோடியின் தொலைநோக்குப் பார்வையிலான தலைமையின் கீழ், ஐஎன்எஸ்வி கௌண்டின்யா போன்ற திட்டங்கள் நமது கடந்த காலத்தைக் கொண்டாடுகின்றன,
நமது நிகழ்காலத்தின் மீது நம்பிக்கையைத் தூண்டுகின்றன, மேலும் தன்னம்பிக்கை கொண்ட, மீண்டெழும் பாரதம் கடல்களில் தனது நியாயமான இடத்தைத் திரும்பப் பெறுகிறது என்பதை உலகிற்குப் பறைசாற்றுகின்றன என்றும் அணணாமலை கூறியுள்ளார்.
















