திருப்புவனம் அருகே போலீசாரின் வாகன பாதுகாப்புடன் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவதாகக் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிளதாரி கிராமத்தில் கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தின் அனுமதி சீட்டை வைத்து மர்மநபர்கள் கிராவல் மண் கடத்தி செல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிளாதரி கிராமத்தில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருவதாகவும், பெரியார் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே பள்ளம் தோண்டி மர்ம நபர்கள் கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால், அதிகாரிகள், மண் திருடுபவர்களிடம் பணத்தை பெற்று கொண்டு ஆதரவாகச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், விவசாயம் செய்யும் பகுதியில் கிராவல் மண் திருட்டில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, கிளாரி கிராமத்தில் மர்மநபர்கள் மண் திருட்டில் ஈடுபடும் ட்ரோன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















