திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்காமல் சிலர் அரசியல் நோக்கத்துடன் செயல்படுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 4 ஆண்டுகளாக மிகச்சிறந்த முறையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்காமல் சிலர் அரசியல் நோக்கத்துடன் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற விடாமல் தடுப்பவர்களுக்கு சிவபெருமான் பாடம் புகட்டுவார் எனவும் கூறினார்.
















