இந்தியாவின் அர்ஜுன் எரிகைசியுடன் தோல்வியுற்றதை ஏற்றுக்கொள்ள முடியாமல், உலக முன்னணி வீரர் மேக்னஸ் கார்ல்சன் மேஜையில் குத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் ராபிட் தொடரில், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி ஆடவர் பிரிவிலும், கோணெரு ஹம்பி மகளிர் பிரிவிலும் வெண்கலம் வென்று அசத்தினர்.
ஆடவர் பிரிவில் நார்வேயைச் சேர்ந்த உலகின் முன்னணி வீரர் மேக்னஸ் கார்ல்சன், 10.5 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். முன்னதாக இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியுடன் நடந்த போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் தோல்வியைத் தழுவினார்.
அப்போது கடும் அதிருப்தியடைந்த கார்ல்சன் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், தனது கையால் மேஜையில் குத்திவிட்டு அரங்கிலிருந்து வெளியேறினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், Sportsmanship இல்லாத கார்ல்சனின் செயல்பாடை பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
















