ஆங்கில புத்தாண்டை கொண்டாட்டங்களுடன் வரவேற்க அனைவரும் தயாராகி வரும் நிலையில், கடுங்குளிரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.
நாட்டின் எல்லைப் பகுதிகளில், குறிப்பாக இமயமலை, சியாச்சின் போன்ற பகுதிகளில் வெப்பநிலை தற்போது மைனஸ் 40 டிகிரி வரை குறைந்துள்ளது.
எலும்பைத் துளைக்கும் கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி காற்று வீசினாலும், நமது வீரர்கள் சற்றும் தளராமல் எல்லையைப் பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில், நமது ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு இணையவாசிகள் தங்கள் நன்றிகளையும், புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதனால், சமூக வலைதளங்களில் IndianArmy, SaluteToSoldiers போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன.
















