சாதி, பணம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை மதிப்பிடக்கூடாது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாலநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற இந்து சம்மேளன நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நாக்பூரில் சிறிய ‘ஷாகா’வில் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ்-ன் பணி, இப்போது எல்லா இடங்களிலும் பரவி இருப்பதாக தெரிவித்தார்.
மக்களை சாதி, பணம் அல்லது மொழியால் மதிப்பிடக்கூடாது என்றும் அவர் கூறினார். முழு நாடும் அனைவருக்கும் சொந்தமானது என்றும், இந்த உணர்வே உண்மையான சமூக நல்லிணக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
வாரத்தில் ஒரு நாளாவது வீட்டில் அனைவரும் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் என்றும் வீட்டில் சமைத்த உணவை ஒன்றாகச் சாப்பிட வேண்டும் என்றும் மோகன் பாகவத் வலியுறுத்தினார்.
மேலும் ஒற்றுமையான இந்து சமூகத்தால் எவ்வித நெருக்கடி சூழலையும் சமாளிக்க முடியும் என்றும் மோகன் பாகவத் கூறினார்.
















