மை பாரத் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற, தமிழக இளைஞர்கள் 80 பேர் தேசிய இளைஞர் தினத்தில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடவுள்ளனர்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் மை பாரத், நாட்டு நலப் பணித் திட்டம் ஆகிய அமைப்புகளின் சார்பில், அரசியல் பின்புலமற்ற இளைஞர்களை தேர்வு செய்து, ‘வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல்’ எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக இளைஞர்கள் 80 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ எனும் தலைப்பில் கலந்துரையாட உள்ளனர்.
















