தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற அதிகப்பட்ச போனஸ் தொகை வழங்கப்படும்.
மேலும் தொகுப்பு ஊதியம் அல்லது சிறப்பு கால முறை அடிப்படை பணியில் ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு 1,000 ரூபாய் போனஸ் அளிக்கப்படும்.
2024-2025 நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்த முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்களும் இதில் உள்ளடங்குவர் என அரசின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகை ஓய்வூதியதாரர்களுக்கும் 1,000 ரூபாய் பொங்கல் போனஸ் தொகையாக வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த போனஸ் அறிவிப்பால் ஏறத்தாழ 9 லட்சத்து 90 ஆயிரம் பேர் பயனடைவார்கள் எனவும் இதற்காக சுமார் 183 கோடியே 86 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது-
















