சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் ரஜினி காந்த்துக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க அவரது இல்லம் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
அப்போது வீட்டிலிருந்து வெளியே வந்த நடிகர் ரஜினி காந்த் இரு கரம் கூப்பி ரசிகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து ரசிகர்கள் கொண்டு வந்த பரிசு பொருட்களை அவர் பெற்றுக் கொண்டார்.
















