குன்னூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்ட நிலையில், இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
கனமழை காரணமாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே சிறு சிறு மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
குன்னூர் உழவர் சந்தை அருகே உள்ள மாடல் ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
உலக சந்தை பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மண் சரிவில் சிக்கி சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மண் சரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















