பொங்கல் பண்டிகையை ஒட்டி கிருஷ்ணகிரி அருகே பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
போச்சம்பள்ளியை அடுத்த சென்றாயம்பட்டி கிராமத்தில் ஏராளமானோர் மண் பானை தயாரிக்கும் தொழில் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், பானைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
கடந்தாண்டு 450 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட மூடியுடன் கூடிய பானை தற்போது 500 ரூபாய்-க்கு விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் கிராமங்கள் மட்டுமின்றி நகர பகுதி மக்களும் மண் பானைகளில் பொங்கல் வைக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















